தென்கொரியா இந்திய வரலாற்று காலநிலைகளில் தமிழியல்களின் பங்களிப்பு - இரா.சிவ.பாலசுப்பிரமணி ஆ நேர்

Korea Tamil Sangam


தமிழ்நாட்டின் தொல் பழங்கால கற்காலம் என்பது 15 /3.85 லட்சம் ஆண்டுகளுக்கும் முந்தையது. தமிழர்களின் ஆமை வழி கடல் வணிக பயணத்திற்கு பிறகு உலகம் முழுவதும் தமிழ் தொன்மங்களை பரவ ஆரம்பித்தது. குறிப்பாக, இந்தோ, பசுபிக் கடல் வழியே ஆப்ரிக்கா, அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, சீனா, கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் தமிழர்களின் அடையாளங்கள் ஏராளம் உள்ளன. இதில், தமிழ் அரசர்கள் பல நாடுகளுக்கு சென்று அங்கு ஆட்சி புரியும் அளவுக்கு கடல் வணிகம் சிறப்பாக செய்திருந்தனர். இதில், கொரியாவை கி.மு 209ம் ஆண்டில் ஆட்சி செய்த ஆயி வம்சத்தின் வழி கிமா சுரோ என்ற அரசர் முக்கியமானவர்

அதாவது, குமரிக்கரை கொண்ட தமிழகம் கி.மு 10ம் நூற்றாண்டுக்கு முன்னர் கரை ஆயி நாடு என அழைக்கப்பட்டது. கடற்கரையை ஒட்டிய இப்பகுதியில் இருந்து கொரியாவுக்கு பெருமளவு கடல் வணிகம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தை ஆட்சி செய்த கவுரியர்கள் எனப்படும் பாண்டியர்களாக அறியப்படும் அரசர்கள் வணிகத்திற்காக கொரியா சென்று ஆட்சி செய்தார்கள் என கருதலாம். ஆனால், கரை ஆயி என்ற இடத்தில் இருந்து வந்த காரணத்தால், கொரிய மக்கள் இவரை ஆயி அரசர் என அழைத்தனர். ஆயி வம்சத்தின் பரம்பரை தொடர்ந்து கொரியாவை ஆட்சி செய்து வந்தது. இதன் தொடர்ச்சியாக ஆயி வம்சத்தில் வழி வந்த கிம்ஸ் சுரோ ஆட்சி செய்தார். இவருக்கு திருமணம் செய்ய, தமிழகத்தின் நில அமைப்பில், கன்னியாகுமரி தெங்கா பட்டினம், திருநெல்வேலி காயல்பட்டினம், மதுரை வைகை பகுதியை உள்ளடக்கிய கரை ஆயி நாட்டின் இளவரிசி கொரியாவுக்கு அழைக்கப்பட்டார். கி.பி 48ம் ஆண்டில் மூன்று பாய் கட்டிய சிவப்பு நிற பாய் மர கப்பல் மூலம் 22 பணியாளர்கள் கொண்டு தமிழக இளவரிசி கொரியா பயணித்தார். வரலாற்று ஆய்வாளர்களால் செம்பவளம் என அறியப்படும் இந்த இளவரிசியை கொரிய மக்கள் ஹியோ ஹவாங் ஒக் என அழைத்தனர். அதன்பின், கிம்ஸ் சுரோ, ஒக் இருவரும் திருமணம் செய்து கொண்டதில் ஒக் 157 வருடம் உயிருடன் இருந்தார்என கொரிய வரலாறு சொல்கிறது . இதில், கொரியாவை 140 ஆண்டுகளுக்கு நிகராக ஆட்சி புரிந்துள்ளார். அவர் இறக்கும் தருவாயில், தான் பேசிய அம்மா, அப்பா என்ற மொழியை மக்கள் அனைவரும் பேச சொல்லி கேட்டிருக்கிறார் என.கொரிய தொன்மம். தமிழ் பெண்களின் விளையாட்டுகளும் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக தமிழர்களின் விளையாட்டுகளான தட்டாங்கல், புனல் ஆடல், பாண்டி ஆட்டம் முதல் தமிழர்களின் மொழி, மரபு, பண்பாடு, பழக்க, வழக்கங்கள் போன்றவை இன்றளவும் வழக்கத்தில் உள்ளன.

கொரியாவுக்கு சென்று ஆட்சி புரிந்தது தமிழகத்தை சேர்ந்த ஆயி என்ற நிலத்தின் அரசி என அறியாத காலத்தில் கொரியர்கள் உத்திர பிரதேசம் பகுதியில் உள்ள அயோத்தியா என்ற இடத்தில் இளவரிசி ஒக் எனப்படும் செம்பவளம், அரசர் சுரோவுக்கு நினைவு மண்டபம் அமைத்தனர். ஆனால், டெல்லி பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று கொண்டது இல்லை. கொரிய மக்கள் வட இந்திய மக்களின் தொன்மம் ஒத்துபோகவில்லை. இதனை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்ததில், தமிழகம் பல ஆயிரம் வரலாற்று கொண்டது. தமிழகத்தின் பொதிகை மலை பகுதியின் சுற்றுவட்டார கடற்கரை உள்ள ஆயித்துறை என்ற துறைமுகம்தான் அயுத்தா என அழைக்கப்பட்டுள்ளது என தமிழக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொரியாவை ஆட்சி செய்த தமிழக அரச பரம்பரையின் ஒட்டு மொத்த வம்சத்தினரான 80 லட்சம் பேர் தற்போது தமிழ் மொழி தொடர்புடைய வார்த்தைகளை பேசி வருகின்றனர். குறிப்பாக, வீட்டின் தூய தமிழ் வார்த்தையான குடி, தலை, செவி, மயிர், நாள், வான், புனை, இளை போன்ற பல வார்த்தைகள் புழக்கத்தில் இருந்துள்ளது. கொரியாவின் வரலாற்று தந்தை ஹோமர் உல்பட் 1905 களில் இதனை உறுதிப்படுத்துகிறார். அதனுடன், மொழி ஆய்வாளர் சேஷாத்திரி கொரியாவில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் பெயர்கள் கொண்ட அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளனர் என கூறியுள்ளார். கொரியாவில் சேஜாங் என்ற அரசர் 15ம் நூற்றாண்டில் செய்த மொழி கட்டமைப்பின் இலக்கண முறையும் தமிழாக உள்ளது. அக்டோபர் 9 அன்று ஹங்குல் மொழி நாள் தென் கொரியாவில் கொண்டாட படுகிறது அதன்பின், பிலிங்கர் என்பவர் 1984ம் ஆண்டு 500 புது தமிழ் வார்த்தைகளை கண்டறிந்துள்ளார். ஒட்டுமொத்தமாக, கொரியா, தமிழ் மொழி இடையே பொதுவாக 5 ஆயிரம் சொற்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொரியாவில் மாறன், குடுமி, குமரி, சோளா,ஆசான் கரை, காயா போன்ற இடங்கள் இன்றளவும் சொல் வழக்கில் உள்ளது. கொரியாவில் உள்ள பெளத்த மதத்தில் தமிழ் வைணவத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தற்போது 5 ஆயிரம் கொரியர்கள் உள்ளனர். கொரியாவில் 5000 பல நாடுகளில் குடியுரிமை பெற்ற தமிழர்கள் உள்ளனர். இது போன்ற கொரிய, தமிழகம் இடையில் பல தொன்ம அடையாளங்கள் இருப்பதால், கொரிய அரசு தமிழகத்தில் உள்ள கொரிய அடையாளங்களையும், கொரியாவில் உள்ள தமிழ் அடையாளங்களையும் வெளிக்கொண்டு வர முனைப்பு காட்டி வருகிறது. அதனை தொடர்ந்து, கொரியர்கள் பலர் தமிழகத்துடன் இணைந்து கொரிய, தமிழ் தொன்மம் ஆராய்ச்சியில் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக, கொரியாவில் பேராசிரியர்கள் ஜும்முன், சுரேஷ் குமார் ஹரி போன்றவர்கள் கொரிய, தமிழ் தொன்மம் குறித்த தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பேராசிரியர் கண்ணன் கொரிய இளவரசியின் தமிழக தொடர்பை பற்றி முதலில் பேசினார். திருக்குறளை கொரியாவில் மொழி பெயர்க்கபட்டுள்ளது கொரியா தமிழ் வேர்ச்சொல் ஆய்வு செய்யவும், கொரியா, தமிழ் அகராதியை கொண்டு வரவும் முயற்சி எடுத்து வருகிறேன்.

இவ்வாறு, கொரிய, தமிழ் இடையிலான தொன்மங்கள் அறிந்து விட்டால், அக்காலக்கட்டத்தில் செயல்படுத்திய வணிக முறை அறிய முடியும். இதன் மூலம், தமிழர்கள் மீண்டும் உலகளாவில அளவில் கடல்சார் வணிகத்தில் திறம்பட செயல்பட முடியும். அதனுடன், தமிழர்களின் பெருமை, திறமை, ஆட்சி முறை உலகமெங்கும் சென்றதை மீண்டும் நிலை நிறுத்தப்படும் .தற்போது கொரியா வந்துள்ள இரா சிவ பாலசுப்பிரமணி ஆ நேர் கொரிய தமிழ்ச்சங்கம் இன்று நடத்திய தமிழ் கலை இலக்கிய விழா சீயோல் கியோங்கி பல்கலைக்கழக வளாகத்தில் மிகவும் சிறப்பாக கலந்து கொண்டார். ஒட்டுமொத்த கொரிய வாழ் பல்துறை திறனாளிகளை உலக அரங்கில் கொண்டு செல்வது கொரியாவில் தமிழ் இருக்கை அமைப்பது கொரிய நூலகத்தில் தமிழ் நூல்களை கொண்டு செல்வது கொரிய தமிழ் வரலாற்றை ஆவணப்படுத்த கொரிய தமிழ்ச்சங்கத்தை ஈடுபடுத்துவது கொரிய இந்திய தூதரகத்தில் தமிழின் சிறப்புகளை பேச வைப்பது பற்றியும் மற்றும் பல தொலைநோக்கு பணிகளை பற்றியும் பேசினார். 

Korea Tamil Sangam
© 2019 ~ 2020 koreatamilsangam.com
All Rights Reserved Terms of Use and Privacy Policy