ஒசோங்-சோங்ஜு, (தென்) கொரியா - திருவள்ளுவர் ஆண்டு 2051, தை மாதம் 12-நாள் (சனவரி 26) அன்று கொரிய தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கொரிய பொங்கல்-2020 நிகழ்வு Korea Chungcheong-buk-do provincial government and Mulberry-Bio co-ordinate system (Chungcheong-buk-do) உதவியுடன் கே-பயோ நிலையத்தின் (K-bio center) அரங்கில் தமிழர் திருநாளுக்குரிய தித்திக்கும் பொங்கல்-கரும்பு, மகிழ்ச்சி பரிமாற்றத்துடனும் பண்பாட்டு விழிமியங்களுடனும் இனிதே நடந்தேறியது. நிகழ்வின் முக்கிய அங்கமாக தமிழர் திருநாள் உரையாற்றிய கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் சுப்பிரமணியன் இராமசுந்தரம் அவர்கள்,

“அன்பிலார் எல்லாம் தமக்குறியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு”

என்ற திருக்குறளை சொல்லி உலகிற்கும் தாய்நாட்டிற்கும் தமிழர்களின் அன்பான வணக்கத்தை உரித்தாக்கி தமிழர் திருநாள் - 2020 உரையை தொடங்கிய தலைவர் அவர்கள், முதலில் கொரியா-இந்திய உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கொரியப் போரில் களத்தில் இந்திய பாராச்சூட் படையணி ஆற்றிய மருத்துவ உதவிப்பணி, இங்கு பல நாடுகளின் தூதரகங்கள் வருவதற்கு முன்பே தொடங்கிய கன்சுலார் அளவிலான இந்திய-கொரிய உறவுகள், இரு நாடுகளுக்கிடையே நிலவும் பாதுகாப்பு மற்றும் தொழில் ஒத்துழைப்பு ஆகியவை பற்றி குறிப்பிட்ட தலைவர் அவர்கள் கொரியாவிற்கு வரும் ஒவ்வொரு இந்தியரும் முக்கியமானவரே ஆகவே அனைவரும் இந்திய-கொரிய உறவுக்கு மேலும் வலுசேர்க்க இங்கிருக்கும் ஒவ்வொரு இந்தியரும் பங்காற்ற வேண்டும் என்றார்.

அடுத்ததாக 1987-களில் கொரியா வந்த தமிழர் தொன்மை ஆய்வாளரான ஒரிசா பாலு அவர்களின் காலத்தை ஒரு முக்கிய புள்ளியாக எடுத்துக்கொண்ட தலைவர் அவர்கள், 1987 முதல் விரிந்திருக்கும் சமகால கொரிய தமிழர் வரலாற்றை விளக்கினார். 1987 முதல் கொரியாவில் வந்து பணியாற்றிய தமிழ்நாட்டு பொறியாளர்கள் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் மேலான உழைப்பின் பலனாகவே இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் முனைவர் பட்ட ஆராய்ச்சி, பொறியியல் மற்றும் தொடர்புடைய துறைகளில் கொரியாவில் வாய்ப்புகளை பெறுகிறார்கள் என்று தம் முன்னோடிகளுக்கு புகழாரம் சூட்டினார். தாம் அறிந்தவரை 2000-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த குறுகிய எண்ணிக்கையிலான மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு வர தொடங்கியதாக குறிப்பிட்ட தலைவர் அவர்கள் இன்று அந்த எண்ணிக்கை பல நூறுகளாக அதிகரித்திருப்பதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் இங்கு 2000 ம் ஆண்டில் கொரியாவிற்கு வந்து உணவாக தொழில் தொடங்கி அந்த துறையில் இந்தியர் பலர் வர முன்னோடியாக இருக்கும் தமிழ்நாட்டைசேர்ந்த உணவகத்தின் உரிமையாளர்கள் திரு. பிரின்ஸ் மற்றும் திருமதி சாந்தி பிரின்ஸ் அவர்கள் பங்களிப்பை மக்களிடம் பகிர்ந்துகொண்டார்.

அதேநேரம், சமகால கொரிய தமிழர் வாழ்வு சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினாலும், இங்கு தமிழர்கள் பெரும்பாலும் சில ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் உயர் தொழில்நுட்ப பணிபுரிபவர்களாக இருக்கும் நிலையே தொடர்கிறது என்ற தலைவர் அவர்கள் கொரியாவாழ் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர் அனைவரும் தொழில்முனைவோராக, கொரியாவின் வளர்ச்சிக்கு பங்காற்றும் கண்டுபிடிப்பாளர்களாக அடுத்த கட்டத்திற்கு சென்று மேன்மேலும் மிளிர வேண்டியதன் தேவைப்பாடு பற்றியும் பேசினார். அதே நேரம், அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சாதித்த பேராசிரியர்கள் ஆறுமுகம் மந்திரம், தாயுமானவன், இராமமூர்த்தி இரமேஷ் மற்றும் பொறியாளர் சுந்தர் பிச்சை போன்றோரையும் இந்தியாவில் அதிகம் சாதித்த சிறுபான்மை இனமான பர்சிக்களில் இருந்து வந்த சம்செட்சி டாடா மற்றும் ஹோமி சகாங்கீர் பாபா போன்றோரை எடுத்துக்காட்டாக எடுத்து பயணிக்க வேண்டும் என்றார். இவ்வாறன பணிகளுக்கு இந்திய தூதரகம் தன்னாலான வேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

உரையின் முக்கிய பகுதியாக மகாத்மா காந்தியடிகளின் அறவழி போராட்டம் நேதாஜி அவர்களின் ஆயுதப்போராட்டம் என அனைத்து வடிவத்திலும் தமிழர்கள் இந்திய நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பேசிய தலைவர், அவ்வாறே இளைஞர்களை கவர்ந்து இந்தியவின் ஆன்மீக கருத்துக்களை உலகெல்லாம் பரவச்செய்த தலைசிறந்த ஆன்மிக தலைவரான சுவாமி விவேகானந்தர் வாழ்விலும் ஆன்மிகம் பரப்பும் பணியிலும் தமிழர்களுக்கு இருக்கும் பங்களிப்பு குறித்தும் பேசினார். தொடர்ந்து, விவேகானந்தர் அவர்கள் சிகாகோ உலக சமய மாநாட்டில் பேசியதன் 125-வது ஆண்டு செப்டம்பர் 2018-ல் நிறைவுபெற்றதை குறிக்கும் வகையிலும் அவர் உலகிற்கு எடுத்துச்சென்ற இந்திய அடையாளங்களை வலுப்படுத்துவதற்காகவும் 2018 ஆகஸ்ட் முதல் இந்திய தூதரகம் வழியே நடத்தப்படும் கலாசார மையங்கள் அனைத்தும் சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையங்கள் என்று பெயர் மாற்றப்பட்டதை குறிப்பிட்டார் நிகழ்நிலையும் 2018 ஆகஸ்ட் ஊடக செய்திகளையும் மேற்கோள் காட்டி தலைவர் பேசினார். மேலும் அதனை வரவேற்ற தலைவர் அவர்கள், விவேகானந்தர் அவர்கள் சிகாகோ உரையை ஆற்றுவதற்கு புரவரலாக இருந்த மன்னர் பாஸ்கர சேதுபதி குறித்து பேசினார்.

மன்னர் சேதுபதி அவர்கள் நன்கு கல்வி கற்ற இந்தியாவை பயணித்து அறிந்துகொண்டவர் என்றும், தான் அழைக்கப்பட்டிருந்த சிகாகோ மாநாட்டிற்கு விவேகானந்தர் அவர்களின் ஆன்மிக ஞானத்தைக்கண்டு தமக்கு பதிலாக விவேகானந்தர் அவர்களை அனுப்பி அதற்கு புரவலராகவும் ஆனார் என்ற உலகறிந்த உண்மையை மன்னர் பற்றிய வரலாற்று குறிப்புகளில் இருக்கும் பதிவுகளை மேற்கோள்காட்டி எடுத்துரைத்தார். மேலும் பாஸ்கர சேதுபதி (1868–1903) அவர்கள் விவேகானந்தரைப் போன்று ((1863–1902) இளமைப்பருவத்திலே இயற்கை எய்தியவர் என்று குறிப்பிட்ட அவர், ஒரு மன்னராகவும் இளம்வயதினராகவும் இருந்தாபோதிலும் பெருந்தன்மையாக இந்தியாவின் ஆன்மிக நோக்கை உலகிற்கு சிறப்பாக கொண்டு செல்லும் நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற அடிப்படையில் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் செயல்பட்டிருப்பதை அறிய முடிகிறது என்றார்.

மேலும் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள், விவேகானந்தர் பாம்பன் திரும்பியபோது எழுப்பிய தூணில் மேற்கோள்காட்டிய “சாத்தியமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்)” என்ற வாசகமே பின்னாளில் 50 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவின் அடையாள வாசகமாக முன்வந்தது குறித்த வரலாற்று தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். சுவாமி விவேகானந்தர் அவர்கள்மன்னரின் ஆன்மிக ஞானம் கண்டு மன்னரை இராஜரிஷி என்று அழைத்தார் என்பதையும் தலைவர் அவரகள் பதிவு செய்தார்

இவ்வளவு சிறந்த மன்னரின் படங்கள் இந்திய தூதரகம் வழியே நடத்தப்படும் சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையங்கள் அனைத்திலும் திறக்கப்படுவதே வரலாற்றிற்கு வாய்மை செய்வதாய் அமையும் என்று குறிப்பிட்ட அவர் இம்மையங்கள் அனைத்திலும் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் படத்தை திறந்து வைக்குமாறு மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் மற்றும் வெளியுறத்துறை அமைச்சர் அவர்களுக்கும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் வைத்தார். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோரும் இந்திய அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நிறைவேற்றுமாறு வேண்டினார்.

இறுதியாக சங்கத்திற்கு தேவையான பொருளாதார வளத்தை சேர்க்க இருக்கும் வாய்ப்புகள் குறித்து விளக்கினார். இதன்பொருட்டு இளமையான கொரிய தமிழ்ச் சங்கத்தின் வலுவான கட்டமைப்பிற்கு உலகில் உள்ள மூத்த தமிழ்ச் சங்கங்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உரையை ஆர்வமுடன் கேட்ட தூதருக்கும் சங்க நிகழ்வுகளில் முன்பு கலந்துகொண்ட தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து அமர்ந்தார்.

குறிப்பு:
      தலைவர் வழிகாட்டுதலுடன் உரையை எழுதியவர்கள்: பொறியாளர்கள் சுவாமிராஜன், சகாய டர்சியூஸ் மற்றும் முனைவர்கள் கார்த்திக் பத்மநாபன், சீனிவாசன் முனியப்பன் மற்றும் அந்துவன் இராஜேஷ் அவர்கள்.

புகைப்படங்கள்:
      முனைவர் இராமன் குருசாமி, பொறியாளர் மு. அனந்த் மற்றும் முனைவர் பிரதீப்

Korea Tamil Sangam
Korea Tamil Sangam
Korea Tamil Sangam

ஒசோங்-சோங்ஜு, (தென்) கொரியா - திருவள்ளுவர் ஆண்டு 2051, தை மாதம் 12-நாள் (சனவரி 26) அன்று கொரிய தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கொரிய பொங்கல்-2020 நிகழ்வு Korea Chungcheong-buk-do provincial government and Mulberry-Bio co-ordinate system (Chungcheong-buk-do) உதவியுடன் கே-பயோ நிலையத்தின் (K-bio center) அரங்கில் தமிழர் திருநாளுக்குரிய தித்திக்கும் பொங்கல்-கரும்பு, மகிழ்ச்சி பரிமாற்றத்துடனும் பண்பாட்டு விழிமியங்களுடனும் இனிதே நடந்தேறியது. பொங்கல் நிகழ்விற்கு அப்பகுதியின் ஆளுமைக்குரிய சுங் சோங் புக் தோ அரசு, மெல்பேரி உணவகம் மற்றும் பயோ கோ-ஒர்டினட் சிஸ்டெம் ஆகிய நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். கொரியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர், பெண்கள், குழந்தைகள் என 200 பேர் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கொரியாவிற்கான இந்திய துணைத்தூதர் மாண்புமிகு சதிஷ் குமார் சிவன், சுங் சோங் புக் தோ மாநில அரசின் பிரதிநிதி மற்றும் மெல்பேரி-பயோ உரிமையாளர்கள் திரு ரியூ ஜெ கியங், திருமதி இன்சொக் கிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக 26 சனவரி இந்திய குடியரசுதினம் என்பதால் கொரியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் அவர்கள் இந்திய கொடியேற்றி பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் கலந்துகொண்ட தூதர் அவர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழாவில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைவதாக தெரிவித்த தூதர் அவர்கள், தூதரகம் மற்றும் இந்திய அரசின் சார்பில் கொரியாவில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். கொரிய தமிழ்ச் சங்கம் வெளியிட்ட மாத நாட்காட்டியை தூதர் அவர்கள் வெளியிட மகளீர் பெற்றுக்கொண்டனர். அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்த விஞ்ஞானிகள் இருவரை தூதர் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார். குறிப்பாக தூதரகம் இங்குள்ள இந்திய மக்களுக்கு செய்யும் உதவிகள் பற்றி தெரிவித்த தூதர் மே-2020-ல் அனுசரணை வழங்கவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் மக்களுக்கு அறியத்தந்தார். பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட தூதர் அவர்களுக்கு தமிழ்கூறும் நல்லுலகின் சார்பிலும் கொரியாவாழ் தமிழ் மக்களின் சார்பிலும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

பொங்கல் நிகழ்வை சுங் சோங் புக் தோ மாநிலத்தில் நிகழ்த்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அரசின் பிரதிநிதி தமிழ் மக்களுக்கு கொரிய திருநாளான சொல்-நாள் (சந்திர வருட பிறப்பு) மற்றும் பொங்கலுக்கான வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்வில் குழந்தைகள் குழுவாகவும் பெற்றோருடனும் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சிகள், கோலப்போட்டி, உறியடி ஆகியவை இடம்பெற்றது.

மேலும் கொரிய-இந்திய உறவுகளுக்கு கலாச்சார பண்பாட்டு மணம் பரப்பும் வகையில் கருத்தியல் மற்றும் செயல்முறையில் பொங்கலையொத்த கொரிய அறுவடைத்திருநாளான சுசோக் திருவிழாவிற்கும் இடையேயான ஒற்றுமை குறித்த காணொளி வெளியிடப்பட்டது.

அடுத்ததாக கொரிய தமிழ்ச் சங்கம்-பயோ கோ-ஒர்டினட் சிஸ்டெம் (Bio Co-ordinate System, Cheongcheong-buk-do Province, Korea சுங் சோங் புக் தோ மாநிலம்) நிறுவனம் இடையே கல்வி, சுற்றுலா, பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் தொழிலக உறவுக்கு பணியாற்றுதல் ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கொரிய பொங்கல் நிகழ்விற்கு தமிழ்நாட்டிலிருந்து மூத்த பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வைகோ, பத்மஸ்ரீ தமிழிசைக்கலைஞர் முனைவர் நர்த்தகி நடராஜ், பிளாஸ்டிக் மேன் ஆப் என்று அழைக்கப்படும் பேராசிரியர் பத்மஸ்ரீ இராஜகோபாலன் வாசுதேவன், தமிழர் தொன்மை-கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு, மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் திரு. ஜேம்ஸ் சிவஞானம் வசந்தன் ஆகியோர் வாழ்த்து அனுப்பியிருந்தனர்.

நிகழ்வின் முக்கிய அங்கமாக தமிழர் திருநாள் உரையாற்றிய கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் சுப்பிரமணியன் இராமசுந்தரம் அவர்கள், கொரியா-இந்திய உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும், 1987 முதல் விரிந்திருக்கும் சமகால கொரிய தமிழர் வரலாற்றை விளக்கி, தமிழர்கள் தொழில்முனைவோராக, கொரியாவின் வளர்ச்சிக்கு பங்காற்றும் கண்டுபிடிப்பாளர்களாக மேன்மேலும் மிளிர வேண்டியதன் தேவைப்பாடு பற்றியும் பேசினார். குறிப்பாக தமிழர்கள் இந்திய நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பேசிய தலைவர், வெளிநாடுகளில் இந்திய தூதரகம் வழியே நடத்தப்படும் சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையங்கள் அனைத்திலும் விவேகானந்தர் அவர்களின் புரவலர் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் படத்தை திறந்து வைக்குமாறு மாண்புமிகு பாரதபிரதமர் அவர்களுக்கும் மற்றும் வெளியுறத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வேண்டுகோள் வைத்த சங்கத்தின் தலைவர், இதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இந்திய அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நிறைவேற்றுமாறு வேண்டினார்.

பொங்கல் நிகழ்வை சங்கத்தின் அறிவுரைக்குழுவினர் முனைவர்கள் போ. கருணாகரன், செ இரத்ன சிங், இரா. அச்சுதன், அ. அந்தோனிசாமி மற்றும் தா, செபக்குமார், துணைத்தலைவர் முனைவர் திருமதி கிறிஸ்ட்டி கேத்தரின், செயலர்கள்-முனைவர்கள் கு. இராமன், செ. ஆரோக்கியராஜ் மற்றும் மோ. பத்மநாபன், முதன்மை பொறுப்பாளர் திரு. லோ. ஆனந்தகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் திரு. கோபாலகிருஷ்ணன், திரு. பிரபாகரன், திரு மு. ஆனந்த், திரு. வே. ஜனகராஜ், திருமதி. பிரியா குணசேகரன், திருமதி சரண்யா பாரதிராஜா, திருமதி. மதுமிதா வாசு, திருமதி தெ. விஜயலட்சுமி மற்றும் திரு. இந்திரஜித், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பளர்கள்-பொறியாளர்கள் திரு சகாய டர்சியூஸ், திருமதி சரண்யா மதி, பொருண்மிய பொறுப்பாளர்கள்-முனைவர்கள் கார்த்திக் பத்மநாபன் மற்றும் அந்துவன் இராஜேஷ் சீனிவாசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்விற்கு சக்ரா இந்திய உணவகம், GME பண பரிமாற்ற நிறுவனம், சைனி ஸ்டார்ஸ் விளையட்டுக்குழு, மிரகில் வேர்ல்ட் பவர், மற்றும் ஜேஆர் பிக்செல்ஸ் தமிழ்நாடுஆகியோர் துணை உதவி செய்திருந்தனர்.

ஒசோங்-சோங்ஜு, (தென்) கொரியா - திருவள்ளுவர் ஆண்டு 2051, தை மாதம் 12-நாள் (சனவரி 26) அன்று கொரிய தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கொரிய பொங்கல்-2020 நிகழ்வு Korea Chungcheong-buk-do provincial government and Mulberry-Bio co-ordinate system (Chungcheong-buk-do) உதவியுடன் கே-பயோ நிலையத்தின் (K-bio center) அரங்கில் தமிழர் திருநாளுக்குரிய தித்திக்கும் பொங்கல்-கரும்பு, மகிழ்ச்சி பரிமாற்றத்துடனும் பண்பாட்டு விழிமியங்களுடனும் இனிதே நடந்தேறியது. நிகழ்விற்கு இந்திய நாட்டின் தலைசிறந்த பாராளுமன்றவாதிகளில் ஒருவரான மாண்புமிகு வைகோ அவர்கள் தன்னுடைய பணிச்சுமை மற்றும் சற்று ஓய்வெடுக்க வேண்டிய சூழல் இருந்தாலும் கொரிய பொங்கல்-2020 நிகழ்விற்கு வாழ்த்துக்கடிதம் ((இணைக்கப்பட்டுள்ளது) அனுப்பியிருந்தார். எமது பொங்கல் 26 சனவரி (குடியரசு தினம்) அன்று நடைபெற்றது. அவ்வாறே ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினரிடம் வாழ்த்து பெற்றதில் கொரிய தமிழ்ச் சங்கம் பெருமகிழ்ச்சியடைகிறது!

Korea Tamil Sangam

குறிப்பு:
      செய்தியை தொகுத்து எழுதியவர்: முனைவர். அரவிந்த் ராஜா மற்றும் முனைவர் பிரதீப், புசான் தேசிய பல்கலைக்கழகம், புசான், தென்கொரியா.

புகைப்படங்கள்:
      முனைவர் இராமன் குருசாமி, பொறியாளர் மு. அ னந்த் மற்றும் முனைவர் பிரதீப்

Korea Tamil Sangam
Korea Tamil Sangam

ஒசோங்-சோங்ஜு, (தென்) கொரியா - திருவள்ளுவர் ஆண்டு 2051, தை மாதம் 12-நாள் (சனவரி 26) அன்று கொரிய தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கொரிய பொங்கல்-2020 நிகழ்வு Korea Chungcheong-buk-do provincial government and Mulberry-Bio co-ordinate system (Chungcheong-buk-do) உதவியுடன் கே-பயோ நிலையத்தின் (K-bio center) அரங்கில் தமிழர் திருநாளுக்குரிய தித்திக்கும் பொங்கல்-கரும்பு, மகிழ்ச்சி பரிமாற்றத்துடனும் பண்பாட்டு விழிமியங்களுடனும் இனிதே நடந்தேறியது. நிகழ்விற்கு தமிழர் தொன்மை மற்றும் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் காணொளி மூலம் வழங்கியிருந்த வாழ்த்துச்செய்தி பின்வருமாறு.

கொரிய தமிழ்ச் சங்கத்தின் பொங்கல்-2020 விழாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். 1987 முதல் அணைக்கும் கொரியாவிற்குமான உறவு தொடர்கிறது. 1905-ம் ஆண்டிலேயே கொரிய மொழி அறிஞர் கெல்மர் கோபர்ட் கொரிய-தமிழ் மொழி தொடர்பு குறித்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதன்பின் 1980-களில் கிளிப்பிங்கர் என்பவர் கொரிய-தமிழ் மொழியிலுள்ள ஒத்த சொற்களை குறித்து புத்தகம் வெளியிட்டார். கொரிய மக்களின் இசை, வழிபாடு, விழாக்கள் மற்றும் உணவு ஆகிய அனைத்திலும் தமிழர் தொடர்பு இருக்கிறது. குடுமி, குமாரி ஆசான் குமி போன்ற பல தமிழ் பெயர்கள் கொண்ட ஊர்களும் அங்கு இருக்கிறது. சிறப்பாக பணியாற்றும் கொரிய தமிழ்ச் சங்க தலைவர் இரமசுந்தரம் அவர்களும் உடனிருந்து உதவி செய்யும் ஆரோக்கியராஜ் அவர்களும், மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கொரிய-தமிழ் உறவை மேலும் கொண்டுசெல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நன்றி! வணக்கம்!

குறிப்பு:
      செய்தியை தொகுத்து எழுதியவர்: திருமதி. மதுமிதா வாசு மற்றும் திருமதி ரூபா அரவிந்த், தேஜான், தென்கொரியா.

புகைப்படங்கள்:
      முனைவர் இராமன் குருசாமி, பொறியாளர் மு. அனந்த் மற்றும் முனைவர் பிரதீப்

Korea Tamil Sangam
Korea Tamil Sangam

ஒசோங்-சோங்ஜு, (தென்) கொரியா - திருவள்ளுவர் ஆண்டு 2051, தை மாதம் 12-நாள் (சனவரி 26) அன்று கொரிய தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கொரிய பொங்கல்-2020 நிகழ்வு Korea Chungcheong-buk-do provincial government and Mulberry-Bio co-ordinate system (Chungcheong-buk-do) உதவியுடன் கே-பயோ நிலையத்தின் (K-bio center) அரங்கில் தமிழர் திருநாளுக்குரிய தித்திக்கும் பொங்கல்-கரும்பு, மகிழ்ச்சி பரிமாற்றத்துடனும் பண்பாட்டு விழிமியங்களுடனும் இனிதே நடந்தேறியது. நிகழ்விற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் காணொளி மூலம் வழங்கியிருந்த வாழ்த்துச்செய்தி பின்வருமாறு.

தென்கொரியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் மொழிசார்ந்த தமிழர்கள் மற்றும் தமிழ் குடும்ப உறவுகள் அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்கள் அனைவரையும் சிறப்பான நாளில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கொரியாவில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொரிய தமிழ்ச் சங்கத்தை நிறுவியிருப்பது எனக்கு மிகவும் மற்றற்ற மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தைக் கடந்து தென்கொரியா சென்று தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு வளர்ச்சியடைய தமிழ் மீதுள்ள பற்றினால் இந்த சங்கத்தை நிறுவிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது போன்றதொரு தமிழ்ச் சங்க நிகழ்வுகள் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் எதிர்கால தலைமுறையினருக்கு சிறப்புடன் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதேபோல் புராதான மொழிகளில் ஒன்றான கொரிய மொழியும் பழமையான மொழியமைப்பை பெற்றதாகும். மிகவும் தொன்மையான மொழியான தமிழ் மொழிக்கும் இந்த கொரிய மொழிக்கும் மொழித்தொடர்பு மட்டுமல்லாமல் நிச்சயமாக பண்பாட்டு தொடர்பும் இருந்திருக்க வேண்டும் என்பது என்னுடைய சிறிய யூகம். தென்கொரியாவில் வாழும் தமிழர்கள் நம்முடைய மொழியின் சிறப்புகளைப் பற்றி மக்களிடம் எடுத்து வைக்கும் போது நம்முடைய மொழியின் வளமையை அவர்கள் விளங்கிக் கொள்ள அதிகம் வாய்ப்புகள் உண்டு. அதேபோன்று மேலும் நம் தமிழ் மொழியின் தொன்மையை மிகவும் சீரிய முறையில் எடுத்துரைக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாக உங்களிடம் வைக்கிறேன். இதேபோன்று தென்கொரியா முழுவதிலுமுள்ள மொழி சார்ந்த நிகழ்வுகள் அனைத்திலும் தமிழை கொண்டு சேர்த்து பெருமைப் படுத்துவது சாலச்சிறந்தது. தமிழ்மொழி அனைத்து இடங்களிலும் பேசப்பட வேண்டும் என்பதே அனைவரின் ஆவலாக உள்ளது.

இன்றைய தலைமுறைகள் பன் மொழி கற்பித்தலுக்கு உட்படுத்தப் பட்டிருந்தாலும் இளைஞர்களும் மாணவர்களும் தமிழ் கற்பித்தலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது மிகப் பெரிய கடமையாகும். மெரினா புரட்சி இளைஞர்களால் தமிழ்மொழி என்றென்றும் வளர்ந்து கொண்டே செல்லும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. பல்வேறு நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பித்து நம்முடைய தாய் மொழியை கற்பிக்கப்பட்டு கல்லூரி அளவிலும் சிறப்பாக செயல்பட்டு வருவது போல் உங்கள் அனைவரின் முயற்சியில் தென்கொரியாவில் இது போன்றதொரு கல்வி நிறுவனங்கள் தமிழுக்காக அமையப் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இந்த நிகழ்வுகள் உடனே நடப்பது சாத்தியமில்லை என்றாலும் வரும் காலங்களில் நாம் அனைவரும் இந்த இலக்கை நோக்கி நகர வேண்டும். இதன் அடித்தளமாக கொரிய தமிழ் சங்கம் நிறுவப்பட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தமிழர் திருநாள் ங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! வணக்கம்!

குறிப்பு:
      செய்தியை தொகுத்து எழுதியோர்: முனைவர். சோணைமுத்து மோகன்தாஸ் மற்றும் முனைவர் சத்யா மோகன்தாஸ், யோங்னம் பல்கலைக்கழகம், தேகு, தென்கொரியா.

புகைப்படங்கள்:
      முனைவர் இராமன் குருசாமி, பொறியாளர் மு. அனந்த் மற்றும் முனைவர் பிரதீப்

Korea Tamil Sangam
Korea Tamil Sangam

ஒசோங்-சோங்ஜு, (தென்) கொரியா - திருவள்ளுவர் ஆண்டு 2051, தை மாதம் 12-நாள் (சனவரி 26) அன்று கொரிய தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கொரிய பொங்கல்-2020 நிகழ்வு Korea Chungcheong-buk-do provincial government and Mulberry-Bio co-ordinate system (Chungcheong-buk-do) உதவியுடன் கே-பயோ நிலையத்தின் (K-bio center) அரங்கில் தமிழர் திருநாளுக்குரிய தித்திக்கும் பொங்கல்-கரும்பு, மகிழ்ச்சி பரிமாற்றத்துடனும் பண்பாட்டு விழிமியங்களுடனும் இனிதே நடந்தேறியது. நிகழ்விற்கு மூத்த ஊடகவியலாளர் மற்றும் பதிப்பாளர் நக்கீரன் கோபால் அவர்கள் காணொளி மூலம் வாழ்த்துரை வாழங்கியிருந்தார. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நக்கீரன் கோபால் அவர்களிடம் வாழ்த்து பெறுவதில் கொரிய தமிழ்ச் சங்கம் மகிழ்ச்சியடைகிறது. வாழ்த்துரை பின்வருமாறுு.

அனைவருக்கும் வணக்கம். கடந்த நான்கு வருடமாக கொரிய தமிழ்ச்சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி உலகத் தமிழ்ச் சங்கத்தின் அங்கீகாரத்தையும் பெற்று அனைவரும் பார்த்து வியக்கும் அளவிற்கு இந்த சங்கத்தை நடத்திக்கொண்டிருக்கும் தலைவர் முனைவர். இராமசுந்தரம் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நக்கீரனின் வாழ்த்துக்கள். முக்கியமாக அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். மேலை நாடுகள் அனைத்திலும் தமிழ் சங்கங்கள் இருந்தாலும் நமது கொரிய தமிழ்ச்சங்கமானது மிகப்பெரிய தனித்துவத்தை பெற்றுள்ளது. நான் அறிந்தவரையில் விஞ்ஞானிகள் பெரும்பாலும் ஒன்றுபட்டு கொரிய தமிழ்ச்சங்கத்தை நிறுவியது தனிப்பெரும் சிறப்பாகும். எனவே தலைவர் முனைவர். ராமசுந்தரம் துணைத் தலைவர் முனைவர் கேத்தரின் கிரிஸ்டி அவர்களுக்கும், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் கொரிய தமிழ்ச்சங்க பணிக்கு நக்கீரனின் தாழ்ந்த வணக்கங்கள்.

தமிழ்நாட்டில் தமிழை பாதுகாக்க மிகவும் சிரமப்படும் அதேவேளையில் அயல்நாடுகளில் தமிழ் சங்கங்கள் நெருங்கி வருவது மிகவும் போற்றுதலுக்கு உரியதாகும். நமது தமிழ் மொழியை ஒரு சிலர் ஒடுக்க நினைத்தாலும் கீழடி போன்ற இடங்களில் கிடைக்கபெற்ற சான்றுகளின் மூலம் தமிழ் உலகின் மூத்த மொழி என்பதை நிரூபித்து வருகிறது. இது போன்று தமிழ் மொழியை மென்மேலும் உலகறியச் செய்ய அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் நம் மொழியை தாங்கிச் செல்வது எங்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. குறிப்பாக கொரிய தமிழ்ச்சங்கம் இது போன்றதொரு நிகழ்வினை கொண்டாடும் விதம் மிகவும் சிறப்புமிக்கது. நம் இனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் குறிப்பாக தமிழர்கள் அந்நாட்டில் வாழும் கொரிய மக்களின் பங்களிப்பும் இருக்கிறது என்று எண்ணும் போது உங்களை நினைத்து தமிழகமே தலை வணங்கும் என்று சொல்லிக் கொள்கிறேன். மேலும் சகோதர, சகோதரிகள் அனைவரும் இணைந்து கொரிய தமிழ்சங்க நிகழ்வுகளான தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்க்கு உங்கள் அனைவருக்கும் நக்கீரன் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு:
      செய்தியை தொகுத்து எழுதியோர்: முனைவர். சோணைமுத்து மோகன்தாஸ் மற்றும் முனைவர் சத்யா மோகன்தாஸ், யோங்னம் பல்கலைக்கழகம், தேகு, தென்கொரியா.

புகைப்படங்கள்:
      முனைவர் இராமன் குருசாமி, பொறியாளர் மு. அனந்த் மற்றும் முனைவர் பிரதீப்

Korea Tamil Sangam
Korea Tamil Sangam

ஒசோங்-சோங்ஜு, (தென்) கொரியா - திருவள்ளுவர் ஆண்டு 2051, தை மாதம் 12-நாள் (சனவரி 26) அன்று கொரிய தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கொரிய பொங்கல்-2020 நிகழ்வு Korea Chungcheong-buk-do provincial government and Mulberry-Bio co-ordinate system (Chungcheong-buk-do) உதவியுடன் கே-பயோ நிலையத்தின் (K-bio center) அரங்கில் தமிழர் திருநாளுக்குரிய தித்திக்கும் பொங்கல்-கரும்பு, மகிழ்ச்சி பரிமாற்றத்துடனும் பண்பாட்டு விழிமியங்களுடனும் இனிதே நடந்தேறியது. நிகழ்விற்கு மூத்த எழுத்தாளர்-ஊடகவியலாளர் ஆதனூர் சோழன் அவர்கள் காணொளி மூலம் வழங்கியிருந்த வாழ்த்துரை பின்வருமாறு.

கொரிய தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். கொரிய தமிழ்ச் சங்க நிகழ்வுகள் தொடர்பாக நக்கீரன் இதழில் பல முறை செய்திகள் வெளியிட்டுள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளாக கொரிய தமிழ்ச் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நண்பர்களின் வாயிலாக அறியப் பெற்றேன். இந்த மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் கொரிய தமிழ்ச் சங்கமானது உலகத் தமிழ்ச் சங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றதற்காக எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கொரிய தமிழ்ச் சங்கத்தின் மிகப்பெரிய பங்களிப்பானது உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் தென்கொரிய அரசாங்கத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. கொரிய தமிழ்ச் சங்கமானது நம்முடைய தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பேணி பாதுகாப்பதில் மற்ற தமிழ்ச் சங்கத்திற்க்கு இணையாக பங்களிப்பு செய்து வருகிறது. கொரிய தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தலைவர் முனைவர். இராமசுந்தரம், துணைத் தலைவர் கேத்தரின் கிருஸ்டி, செயலாளர் முனைவர். இராமன், துணைச் செயலாளர் முனைவர். ஆரோக்கியராஜ் போன்றவர்கள் மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.

நான் கடந்த ஆண்டு கொரியாவின் கதை என்று ஒரு தொடர் நக்கீரன் இணையதளத்தில் எழுதி இருந்தேன். இந்தத் தொடர்தான் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கும் எனக்கும் ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆகவே தமிழ் தான் என்னை உங்களோடு இணைத்து இருக்கிறது என்பதில் பெருமை அடைகிறேன். உலக நாடுகள் அனைத்திலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் அந்தந்த நாடுகளில் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்று வருகிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதற்கேற்ப உலக மக்களோடு இணைந்து வாழ்ந்து வருவது மிகவும் போற்றுதலுக்கு உரியது. இந்த வகையில் கொரிய தமிழ்ச் சங்கமானது தமிழ் மற்றும் தமிழர் நலன் ஆகியவற்றில் மிகச் சிறப்பான செயல்பாடுகளை பின்பற்றி வருகிறது.

உதாரணமாக சமீபத்தில் தமிழக அரசானது கொரிய அரசோடு இணைந்து கொரிய மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த புத்தகத்தில் உள்ள விளக்க உரையை கொரிய மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிடப்படுவது மட்டுமல்லாமல் தமிழ்-ஆங்கிலம்-கொரியன் மொழியில் திருக்குறள் ஆண்ட்ராய்டு செயலியையும் வெளியிட இருப்பது வரலாற்று சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்ட்ராய்டு செயலியை பொறியாளர். ஜனகராஜ் போன்றவர்கள் மிகச் சிறப்பாக உருவாக்கி இருப்பதாக நண்பர் இராமசுந்தரம் தெரிவித்தார். விரைவில் இந்த ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட படுவதாகவும் இந்த முயற்சியை அலுவலகரீதியாக முன்னெடுக்க தென்கொரிய உள்ள இந்திய தூதரகம் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுபோன்றதொரு நடவடிக்கைகளில் கொரியா தமிழ்ச்சங்கம் ஈடுபடும்போது அந்த சங்கத்தின் மீதான மதிப்பு மென்மேலும் உயர்வது மட்டுமல்லாமல் சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்கு இரண்டு நாடுகளின் அரசுகளும் ஊக்கமளிக்கும் என்பது உறுதி. இந்த வகையில் கொரிய தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் விழா நிகழ்ச்சியில் பெரும் திரளாக தமிழ் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி! வணக்கம்!

குறிப்பு:
      செய்தியை தொகுத்து எழுதியோர்: முனைவர். சோணைமுத்து மோகன்தாஸ் மற்றும் முனைவர் சத்யா மோகன்தாஸ், யோங்னம் பல்கலைக்கழகம், தேகு, தென்கொரியா.

புகைப்படங்கள்:
      முனைவர் இராமன் குருசாமி, பொறியாளர் மு. அனந்த் மற்றும் முனைவர் பிரதீப்

Korea Tamil Sangam
Korea Tamil Sangam

ஒசோங்-சோங்ஜு, (தென்) கொரியா - திருவள்ளுவர் ஆண்டு 2051, தை மாதம் 12-நாள் (சனவரி 26) அன்று கொரிய தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கொரிய பொங்கல்-2020 நிகழ்வு Korea Chungcheong-buk-do provincial government and Mulberry-Bio co-ordinate system (Chungcheong-buk-do) உதவியுடன் கே-பயோ நிலையத்தின் (K-bio center) அரங்கில் தமிழர் திருநாளுக்குரிய தித்திக்கும் பொங்கல்-கரும்பு, மகிழ்ச்சி பரிமாற்றத்துடனும் பண்பாட்டு விழிமியங்களுடனும் இனிதே நடந்தேறியது.

நிகழ்விற்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுபெற்ற முதல் மூன்றாம் பாலினத்தவரும் (திருநங்கை) தமிழிசைக்கலைஞர் என்று அறியப்படுபவருமான பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ் அவர்கள் கொரிய தமிழ் சங்கத்தின் பொங்கல்-2020 நிகழ்விற்கு காணொளி மூலம் வழங்கியிருந்த வாழ்த்துரை வாழ்த்து அனுப்பியிருக்கிறார்கள் என்பதை தமிழ்கூறும் நல்லுலகிற்கு மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். முன்பு மூன்றாம் பாலினம் சந்தித்த ஒதுக்கல்களை எதிர்கொண்ட பத்மஸ்ரீ நர்த்தகி அவர்கள் நாட்டியத்தை தேர்ந்தெடுத்து அந்த துறையில் சாதித்திருக்கிறார். அவரின் சாதனையம் உழைப்பும் இளையோர்களால் உருவாக்கப்படும் கொரிய தமிழ் சங்கத்திற்கு பெறுமதிமிக்க எடுத்துக்காட்டு மற்றும் உந்துதல் என்றால் அது மிகையாகாது! மூன்றால் பாலினத்திற்கு "திருநங்கை" என்ற மதிப்புமிக்க தமிழ் சொல்லை முதலில் பரிந்துரைத்து பயன்படுத்தியவரும் தமிழுக்கு சங்கம் அமைத்த மதுரையில் பிறந்த பத்மஸ்ரீ நர்த்தகி அவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த சொல் அப்போதைய தமிழ்நாட்டு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசாணையாகி நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாறு நாம் அனைவரும் அறிந்ததே!

பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ் அவர்கள் ணொளி மூலம் வழங்கியிருந்த வாழ்த்துரை பின்வருமாறு

தாய்நாட்டை விட்டு வெளியில் இருக்கும் அணைத்து தமிழர்களுக்கும் தமிழிசை நாட்டியக்கலைஞரான நர்த்தகி நடராஜின் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள். வெளிநாட்டில் இருந்தாலும் தமிழ் பண்பாடு மறவாமல் நமது அடையாள திருநாளை நீங்கள் அனைவரும் முன்னெடுப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதற்காக ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் அவர்களையும் மற்றும் அமைப்பாளர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். சனவரி 26 அன்று நடைபெற இருக்கும் கொரிய பொங்கல் விழாவில் என்னால் நேரடியாக கலந்துகொள்ள முடியாவிட்டாலும் என்னுடைய மனம் உங்களோடு இணைத்திருக்கும். கொரிய தமிழ்ச் சங்கம் மேலும் பல நிகழ்ச்சிகளை செய்வதோடு தமிழர் விழுமியங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தற்பொழுது கீழடி அகழாய்வு தமிழர் அனைவருக்கும் புதிய உயிர்ப்பை கொடுத்திருக்கிறது. அந்த உத்வேகத்தோடு உங்கள் அனைவருக்கும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மீண்டும் வாழ்த்துக்களை சொல்லி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!

குறிப்பு:
      செய்தியை தொகுத்து எழுதியோர்: திருமதி விஜயலட்சுமி பத்மநாபன், மற்றும் திருமதி சுதா ஜனகராஜ், சியோல், தென்கொரியா.

புகைப்படங்கள்:
      முனைவர் இராமன் குருசாமி, பொறியாளர் மு. அனந்த் மற்றும் முனைவர் பிரதீப்

Korea Tamil Sangam
Korea Tamil Sangam

ஒசோங்-சோங்ஜு, (தென்) கொரியா - திருவள்ளுவர் ஆண்டு 2051, தை மாதம் 12-நாள் (சனவரி 26) அன்று கொரிய தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கொரிய பொங்கல்-2020 நிகழ்வு Korea Chungcheong-buk-do provincial government and Mulberry-Bio co-ordinate system (Chungcheong-buk-do) உதவியுடன் கே-பயோ நிலையத்தின் (K-bio center) அரங்கில் தமிழர் திருநாளுக்குரிய தித்திக்கும் பொங்கல்-கரும்பு, மகிழ்ச்சி பரிமாற்றத்துடனும் பண்பாட்டு விழிமியங்களுடனும் இனிதே நடந்தேறியது. நிகழ்விற்கு இந்திய நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரியவிருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்றவரும் பிளாஸ்டிக் கழிவிலான தார்ச்சாலை தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து "பிளாஸ்டிக் மேன் ஆப் இந்தியா" என்று பெருமையுடன் அழைக்கப்படும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் பத்மஸ்ரீ ராஜகோபாலன் வாசுதேவன் அவர்கள் கொரிய தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் நிகழ்விற்கு வாழ்த்து அனுப்பியிருக்கிறார்கள் என்பதை இளம் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், பொறியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோரால் அமைக்கப்பட்ட கொரிய தமிழ்ச் சங்கம் உள்ளபடியே தமிழ்கூறும் நல்லுலகிற்கு பெருமகிழ்ச்சியுடன் அறியத்தருகிறது! அனுப்பியிருக்கிறார்கள் என்பதை தமிழ்கூறும் நல்லுலகிற்கு மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

குறிப்பாக திருக்குறள். கடவுள் மனிதனுக்கு கொடுத்த பகவத்கீதையை தமிழாக்கி மனிதன் மனிதனுக்கே கொடுத்ததுதான் திருக்குறள். அத்தகைய குறளை நமது வாழ்க்கையில் வழித்துணையாக கொள்ள வேண்டும். கொரிய தமிழ்ச் சங்கம் திருக்குறளின் ஒவ்வொரு பகுதியை மக்கள் அறியும் வகையில் கொண்டு செல்ல வேண்டும். நாம் ஒவ்வொருநாளும் எழுந்தவுடன் ஒரு திருக்குறளை சொல்லி அதன்படி வாழ்ந்தாலே நாம் வாழ்வில் முன்னேறலாம். நாம் முன்னேறினால் இந்த நாடு முன்னேறும். நாடு முன்னேறினால் , நாடு முன்னேறினால் உலகம் முன்னேறும். வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் வாழ்க்கை அழகானது அதனை வெற்றிகரமானதாக்கு என்பார்கள். அது செய்ய வேண்டுமானால் நமக்கு ஒரு வழிகாட்டி வேண்டுமே அந்த வழிகாட்டிதான் திருக்குறள் அதனை நாம் நன்கு பயன்படுத்த வேண்டும். கொரிய தமிழ்ச் சங்கம் திருக்குறள் மற்றும் தமிழர் விழிமியங்களை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் அதற்காக என்னைப்போன்றோரும் தமிழ் வளர்க்கும் தியாகராஜர் பொறியியற் கல்லூரி தாளாளர் அவர்களும் துணைநிற்பார்கள். நன்றி! வணக்கம்!

முன்னதாக கொரியா தமிழ்ச் சங்க தலைவரும் தமக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்க காரணமாக அமைந்த பிளாஸ்டிக் தார்ச்சாலை ஆராய்ச்சி வேலைத்திட்ட்டத்தில் பிளாஸ்டிக் தார்ச்சாலை தொழில்நுட்பத்தை களத்தில் பயன்படுத்த தேவையான படிநிலையை உருவாக்கிய தன்னுடைய மாணவருமான முனைவர் சுப்பிரமணியன் இராமசுந்தரத்தின்-பால் தமது அன்பையும் நன்றியையும் தெரிவித்தது ஆசிரியர்-மாணவர் இடையே நீண்ட காலம் மற்றும் தொலைவுக்கிடையே ஒரு நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்தது. பத்மஸ்ரீ வாசுதேவன் அவர்கள் தம் மாணவரின் பங்களிப்பிற்கு பொதுவெளியில் நன்றி தெரிவித்தது பலரையும் கவர்ந்தது.

குறிப்பு:
      செய்தியை தொகுத்து எழுதியோர்: திருமதி சரண்யா பாரதிராஜா மற்றும் திருமதி பிரியா குணசேகரன் ஆகியோர், தென்கொரியா.

புகைப்படங்கள்:
      முனைவர் இராமன் குருசாமி, பொறியாளர் மு. அனந்த் மற்றும் முனைவர் பிரதீப்

Korea Tamil Sangam
Korea Tamil Sangam
Korea Tamil Sangam

Korea Tamil Sangam
© 2019 ~ 2020 koreatamilsangam.com
All Rights Reserved Terms of Use and Privacy Policy